20 வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

20 வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-24 16:12 GMT

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரிஜ்வான் என்ற குல்லா ரிஜ்வான் (வயது 37), பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கெம்பேகவுடா போலீஸ் நிலையத்தில் ரிஜ்வான் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது.

இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ரவுடி ரிஜ்வான் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்த நிலையில், சிவமொக்கா மாவட்டத்தில் ரவுடி ரிஜ்வான் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே கெம்பேகவுடா போலீசார், சிவமொக்காவுக்கு சென்று ரிஜ்வானை கைது செய்துள்ளனர். பெங்களூரு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்