தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி...!

டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்தது ஆம் ஆத்மி.;

Update:2022-12-08 21:29 IST

புதுடெல்லி,

தேர்தல் ஆணைய விதிகளின் படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது. 4 மாநிலங்களில் தடம் பிடித்து, தேர்தல் ஆணைய விதிகளின் படி ஆம் ஆத்மி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

ஆம் ஆத்மி டெல்லி, பஞ்சாப்பில் அதிக இடங்களில் வென்று ஆட்சியில் இருக்கிறது. மார்ச் மாதம் நடந்த கோவா தேர்தலில் 6.77 சதவீத வாக்கை பெற்றது ஆம் ஆத்மி. இப்போது குஜராத் தேர்தலில் 12 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது ஆம் ஆத்மி. குஜராத்தில் 5 இடங்களில் வென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்