கருப்பாக இருக்கிறாய் என கூறிய கணவருக்கு மனைவி கொடுத்த நூதன தண்டனை...!

சத்தீஷ்காரில் கருப்பு நிறம் என கூறி தொடர்ந்து துன்புறுத்திய கணவரை மனைவி கொலை செய்துள்ளார்.

Update: 2022-09-28 08:01 GMT



துர்க்,


சத்தீஷ்காரின் துர்க் மாவட்டத்தில் அம்லேஷ்வர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஆனந்த் சோன்வானி (வயது 40). இவரது மனைவி சங்கீதா சோன்வானி (வயது 30). கருப்பு நிறத்துடன் காணப்பட்ட மனைவியை தொடர்ந்து குறிப்பிட்டு, அழகாக இல்லை என்றும் கூறி கணவர் ஆனந்த் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி கோடாரியால் அவரது கணவரை வெட்டி கொன்றுள்ளார். பின்பும் ஆத்திரம் அடங்காமல் கணவரின் மர்ம உறுப்பை அறுத்து உள்ளார்.

எனினும், அடுத்த நாள் யாரோ சிலர் தனது கணவரை கொன்று விட்டனர் என கிராமவாசிகளிடம் தவறான தகவலை கூறியுள்ளார். இந்த நிலையில், படுகொலை சம்பவம் பற்றி விசாரணை நடத்திய போலீசார் திடுக்கிடும் தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

ஆனந்தின் மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். முதல் மனைவி இறந்த பின்னர், சங்கீதாவை 2-வது திருமணம் செய்துள்ளார் ஆனந்த். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்