எருமை மாட்டை வேட்டையாடிய புலி

எருமை மாட்டை வேட்டையாடிய புலியால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2023-01-11 18:45 GMT

குடகு:-

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா பால்யா முந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்தார். இந்த மாட்டை வீட்டின் அருகே கட்டி வைத்திருப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாட்டை வீட்டின் அருகே கட்டியிருந்தார். இந்நிைலயில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் புகுந்த புலி ஒன்று எருமை மாட்டை அடித்து கொன்றது. பின்னர் அந்த உடலை கிராமத்தில் இருந்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றது. நேற்று காலை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அப்போது கிராம மக்கள் அவரிடம் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிப்பதாக உறுதி அளித்தனர். இருப்பினும் புலியின் நடமாட்டத்தால் கிராம மக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்