கோவில் அருகே சாமி படங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து - பக்தர்கள் ஓட்டம்... திருப்பதியில் பரபரப்பு

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே சாமி படங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2023-06-16 15:15 IST

திருப்பதி,

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இன்று மதியம் சாமி படங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. தீயை அணைக்க முயன்றபோது மளமளவென பற்றி எரிந்த தீ கடை முழுவதும் பரவியது. அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்