வகுப்பறைக்குள் மாணவியுடன் முத்தப்போட்டி நடத்திய மாணவர்
மங்களூருவில் தனியார் கல்லூரி வகுப்பறைக்குள் மாணவியுடன், மாணவர் ஒருவர் உதட்டோடு, உதடு முத்தப்போட்டி நடத்தியுள்ளார்.
மங்களூரு;
முத்தப்போட்டி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டார மற்றும் வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்-மாணவி வகுப்பறைக்குள் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டு கொண்டதும், சக மாணவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துவதும் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது வகுப்பறைக்குள், கல்லூரி மாணவர்கள் முத்தமிடுதல் போட்டி நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி சீருடையில் இருந்த ஒரு மாணவரும், ஒரு மாணவியும் மற்ற மாணவர்கள் முன்பு வந்து நின்று பின்னர் 2 பேரும் ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிந்துள்ளனர்.
இதனை சக மாணவர்கள் உற்சாகப்படுத்தியுடன் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருவது தெரியவந்துள்ளது.
இ்தற்கிடையே இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் முகம் சுழித்துள்ளனர். மேலும் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது
இதுபற்றி மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்-மாணவி ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவத்தின்போது மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.