என்.ஆர்.புரா அருகே தொடர் அட்டகாசம் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க எம்.எல்.ஏ.விடம் மக்கள் கோரிக்கை

என்.ஆர்.புரா அருகே தொடர் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க கோரி எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-05-30 18:45 GMT

சிக்கமகளூரு-

என்.ஆர்.புரா அருகே தொடர் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க கோரி எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காட்டுயானைகள் நடமாட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கரகானே கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவர் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளார். இந்த விவசாய நிலம் வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காட்டுயானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்து விளை பயிர்களை நாசப்படுத்திவிட்டு சென்றன. இதனால் நவீன் குமாரின் விவசாய நிலத்தில் மட்டுமில்லை, கரகானே கிராமம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் நாசமானது. இதனால் நவீன் உள்பட கிராம மக்கள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.

அந்த புகாரை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தனர். ஆனால் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க முன் வரவில்லை. இதனால் மீண்டும் காட்டுயானைகள் விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 காட்டுயானைகள், விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

மேலும் இந்த தொடர் சம்பவத்தால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்தநிலையில் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.ராஜேகவுடாவிடம் மனு அளிக்க முடிவு செய்தனர்.அதன்படி விவசாயி நவீன் உள்பட கிராமத்தினர் நேற்று எம்.எல்.ஏ.ராஜேகவுடாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது அவர்கள் கரகானே பகுதியில் கடந்த 2 நாட்களாக 2 காட்டுயானைகள் சுற்றி திரிந்து வருகிறது.

இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விளை பயிர்கள் நாசமானது. மேலும் வனப்பகுதியையொட்டி விவசாய தோட்டத்திற்குள் தொழிலாளிகள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் அந்த 2 காட்டுயானைகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை வாங்கிய எம்.எல்.ஏ.ராஜேகவுடா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்