நகைக்கடை உரிமையாளரை மிரட்டி ரூ.1 லட்சம் பறித்த போலீஸ்காரர்

திருட்டு நகைகளை மீட்க சென்றபோது நகைக்கடை உரிமையாளரை மிரட்டி ரூ.1 லட்சம் பறித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2022-11-13 16:44 GMT

நெலமங்களா:-

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் போலீசார் திருட்டு வழக்கில் ஒரு பெண்ணை கைது செய்து இருந்தனர். அந்த பெண் திருடிய நகைகளை நகைக்கடையில் விற்றதாக கூறி இருந்தார். இந்த நிலையில் விற்கப்பட்ட நகைகளை மீட்க சாதாரண உடையில் போலீஸ்காரர் ஒருவர் பெண்ணை நகைக்கடைக்கு அழைத்து சென்றார்.

அங்கு நகைகளை மீட்ட பின்னர் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி போலீஸ்காரர் ரூ.1 லட்சம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த நகைக்கடை உரிமையாளர், நகைகள் தயாரிக்கும் சங்கத்தினரிடம் கூறி இருந்தார். இதையடுத்து நகை தயாரிக்கும் சங்கத்தினர் நெலமங்களா டவுன் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பபட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது.

Tags:    

மேலும் செய்திகள்