மதுபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்த நபர் - எச்சரித்த அனுப்பிய போலீசார்...!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் மதுபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்த நபரை ‘இனி இதுபோல விலங்குகளை துண்புறுத்தக் கூடாது’ என எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Update: 2023-05-10 05:05 GMT

ரிஷிகேஷ்,

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ஒருவர் காளையை சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 16 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு நபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேஷின் தெருக்களில் சவாரி செய்வதைக் காட்டுகிறது.

இந்த வீடியோவை சத்ய பிரகாஷ் பார்தி என்ற பயனர் யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். "ரிஷிகேஷ் உத்தரகண்டில் காளை சவாரி செய்யும் ஒருவர்" என்ற தலைப்பில் யூடியூபர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அந்த நபர் ரிஷிகேஷின் தெருக்களில் காளையை சவாரி செய்யும் போது, "கைலாஷ் பதி நாத் கி ஜெய் ஹோ" என்று கூறுவதும் கேட்கப்படுகிறது.

இந்தநிலையில், உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் மதுபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்த நபரை பிடித்த போலீசார் 'இனி இதுபோல விலங்குகளை துண்புறுத்தக் கூடாது' என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்