அறைக்குள் புகுந்த சிறுத்தைப்புலி; புத்திசாலியாக செயல்பட்ட சிறுவன்: வைரல் வீடியோ

சிறுவன் ஆஹிரே கூறும்போது, எனக்கும், சிறுத்தைப்புலிக்கும் இடையே மிக குறைந்த அளவே இடைவெளி இருந்தது என கூறினான்.

Update: 2024-03-07 16:09 GMT

புனே,

மராட்டியத்தின் மாலேகாவன் நகரில் திருமண மண்டபத்தின் காவலாளியாக பணியாற்றி வருபவரின் 12 வயது சிறுவன் மொகித் ஆஹிரே. அறையில் அமர்ந்து, செல்போனில் பேசி கொண்டிருந்தபோது, அதிர்ச்சி தரும் அந்த சம்பவம் நடந்தது.

அவனுடைய அறையில் சிறுத்தைப்புலி ஒன்று திடீரென நுழைந்துள்ளது. இதனை பார்த்ததும் மிரண்டு விடாமல், அது உள்ளே சற்று தொலைவில் சென்றதும் செல்போனை கீழே வைத்து விட்டு, உடனடியாக எழுந்து வெளியே சென்று அறை கதவை சாத்தி விட்டான்.

இதன்பின்னர், தந்தையிடம் தகவல் தெரிவித்து உள்ளான். இதுபற்றிய வீடியோ ஒன்று வெளிவந்து உள்ளது. சம்பவம் பற்றி சிறுவன் ஆஹிரே கூறும்போது, அது மிக நெருக்கத்தில் இருந்தது. எனக்கும், சிறுத்தைப்புலிக்கும் இடையே மிக குறைந்த அளவே இடைவெளி இருந்தது. எனக்கு முன்னால் நடந்து சென்ற அது, அலுவலக அறையின் உட்புற பகுதிக்கு சென்றது. நான் பயந்து போய் விட்டேன்.

ஆனால், அமைதியாக எழுந்து, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன். கதவை சாத்தி விட்டேன் என கூறுகிறான். இதன்பின்னர் வன துறை அதிகாரிகள் சென்று, 5 வயதுடைய அந்த ஆண் சிறுத்தைப்புலியை மயக்கமடைய செய்து, பின்னர் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்