சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

எச்.டி.கோட்டை அருகே சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிழந்தாா்.;

Update:2023-09-21 00:15 IST

எச்.டி.கோட்டை

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மானந்தவாடி ரோடு பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் (வயது19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை தனது தங்கை யசஸ்வினியுடன் சரமள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டாட யஷ்வந்த் முடிவு செய்தார். அதன்படி, அவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில் சிரமள்ளி கிராமத்திற்கு சென்றனர்.

அங்கு பண்டிகையை அவர்கள் கொண்டாடினர். பின்னர் அங்கிருந்து யசஸ்வினி, யஷ்வந்த்ஆகிய 2 பேரும் ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மைசூரு- மானந்தவாடி சாலை கைமரம் அருகே உள்ள ஓட்டல் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு 2 பேரும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் யசஸ்வினி, யஷ்வந்த் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேஷ், சசி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எச்.டி.கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யஷ்வந்த் பரிதாபமாக இறந்தார்.

மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கைமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்