பூட்டிய வீட்டில் திருட முயன்றவர் கைது

பூட்டிய வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-21 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா சந்தேமார்க்கெட் பகுதியில் வீடு ஒன்றில் திருடன் ஒருவன் புகுந்து நகைகளை திருட முயற்சித்தார். அப்போது திடீரென்று அந்த வீட்டின் கேட் திறக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது திருடன் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டிற்குள் சென்ற அப்பகுதி மக்கள் திருடனை கையும், களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் திருடனை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக திருடனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரது பெயர் ரகு என்று தெரியவந்தது. இதற்கு முன்பு திருட்டில் எதுவும் ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த என்.ஆர்புரா போலீசார், ரகுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்