வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.! இந்திய வானிலை மையம் தகவல்
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும்.
பின்னர்,மெதுவாக மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் 26ம் தேதி வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.