மூடிகெரேயில் காபி தோட்டத்தில் ராஜநாகம் பிடிபட்டது

மூடிகெரேயில் காபி தோட்டத்தில் ராஜநாகம் பிடிபட்டது

Update: 2023-09-17 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பனகல் அருகே உள்ள காபி தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ராஜநாகம் ஒன்று காபி தோட்டத்திற்குள் சென்றதை அவர்கள் பார்த்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் பாம்பு பிடி வீரர் ஆரீப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பாம்பு பிடி வீரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அங்கு சுற்றித்திரிந்த ராஜநாகத்தை ஒரு மணி நேரம் போராடி பிடித்தார். பின்னர் அந்த ராஜநாகத்தை சார்மடி மலைப்பகுதியில் விட்டார்.

இதனால் தோட்ட தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேப்போல் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா பாலே கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் தோட்டத்திற்கு நேற்றுமுன்தினம் நாகேந்திரா சென்றார். அப்போது 13 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நாகேந்திரா பாம்பு பிடி வீரர் ஹரிந்திராவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பாம்பு பிடி வீரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜநாகத்தை பிடித்தார். பின்னர் ராஜநாகத்தை அடர்ந்த வனப்பகுதியில் ஹரிந்திரா விட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்