ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகள் திறப்பு: மக்கள் படையெடுப்பு

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன.

Update: 2022-09-19 05:46 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீரில் முதல் முறையாக 'மல்டிப்ளக்ஸ்' சினிமா தியேட்டர்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் மத்திய அரசின் இளைஞர் நலத் துறை, அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, இங்கு தியேட்டர்களை திறந்து வருகிறது. இதன்படி புல்வாமா மற்றும் ஷோபியன் ஆகிய இரு இடங்களில் மல்டிப்ளக்ஸ் சினிமா அரங்குகளை திறந்து வைத்த துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா,

''இது ஒரு வரலாற்று நிகழ்வு,'' எனக் குறிப்பிட்டார். 'இதேபோன்று அனந்த்நாக், ஸ்ரீநகர், பந்திபோரா, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய இடங்களிலும் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தியேட்டர்கள் திறப்பால் சினிமா ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டரில் படத்தை கண்டுகளித்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் சினிமாவை கண்டுகளித்தாக உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்