கர்நாடகத்தில் புதிதாக 942 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 942 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-10 21:15 GMT

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கர்நாடகத்தில் நேற்று 22 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 942 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 831 பேர் பாதிக்கப்பட்டனர். மைசூருவில் 30 பேர், தட்சிண கன்னடாவில் 13 பேர், பெலகாவி, கோலாரில் தலா 11 பேர், உடுப்பியில் 10 பேர், பீதரில் 5 பேர், பல்லாரி, தார்வார், மண்டியா, துமகூருவில் தலா 4 பேர், சிவமொக்கா, சிக்கமகளூருவில் தலா 3 பேர், கதக், ஹாசன், உத்தர கன்னடாவில் தலா 2 பேர், பாகல்கோட்டை, தாவணகெரே, கொப்பலில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை.

இதுவரை 39 லட்சத்து 79 ஆயிரத்து 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 81 பேர் இறந்து உள்ளனர். நேற்று 737 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 32 ஆயிரம் பேர் குணம் அடைந்து உள்ளனர். 6 ஆயிரத்து 898 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 6,389 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்