நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-03-14 12:21 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் விமான நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பல்வேறு வழிகளில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 8,956 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,317.43 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசுக்கு ரகசிய தகவல்களின் அடிப்படையில், புலனாய்வு அமைப்புகள் தங்க கடத்தலை தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்