லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 9 வீரர்கள் பலி

லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

Update: 2023-08-19 15:47 GMT

லே,

லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த வீரர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்