சிக்கமகளூரு பா.ஜனதா நிர்வாகிகள் 9 பேர் ராஜினாமா
பிரவீன் படுகொலை எதிரொலியாக சிக்கமகளூரு பா.ஜனதா நிர்வாகிகள் 9 பேர் ராஜினாமா செய்தனர்.;
சிக்கமகளூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிக்கமகளூரு ஆசாத் பூங்காவில் நேற்று, பிரவீன் கொலையை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். பின்னர் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சந்தீப் உள்பட கட்சி நிர்வாகிகள் 9 பேர் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட செயலாளர் புஷ்பராஜிடம் கொடுத்தனர்.
அவர்கள், செயலாளரிடம் பா.ஜனதா இளைஞரணிக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பிரவீனை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.