இந்தியாவில் மேலும் 682 பேருக்கு தொற்று

ஜேஎன்.1 புதிய வைரஸ் கண்டறியப்பட்டதற்கு பின்னர் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Update: 2024-01-08 09:53 GMT

புதுடெல்லி,

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதியவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் 199, கேரளாவில் 148, மராட்டியத்தில் 139, கோவாவில் 47, குஜராத்தில் 36, ஆந்திராவில் 30, ராஜஸ்தானில் 30, தமிழ்நாட்டில் 26, டெல்லியில் 21, ஒடிசாவில் 3, தெலுங்கானாவில் 2, அரியானாவைச் சேர்ந்த ஒருவர் புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வகை தொற்றால் எண்ணிக்கை அதிகரித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமாகிவிடுவதால் இது குறித்து பெரிதும் கவலைப்படவேண்டியதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர் காலத்தின் தொடக்கம் மற்றும் ஜேஎன்.1 புதிய வைரஸ் கண்டறியப்பட்டதற்கு பின்னர் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார வழிகாட்டுதலின்படி, மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்