முதியவரை கோடரியால் கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கோடரியால் தாக்கியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-09-03 12:25 GMT

கோப்புப்படம்

பாக்பத்,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கோடரியால் தாக்கியதில் 60 வயது முதியவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கெக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஜய்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாவூத் அலி என்ற முதியவரை அவரது வீட்டிற்கு வெளியே கோடரியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து காயமடைந்த தாவூத் அலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்