டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் அபேஸ்; மர்ம நபருக்கு வலைவீச்சு

மங்களூருவில் டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசாா வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-15 19:00 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அப்போது எதிர்முனையில் பேசிய நபர், டாக்டரிடம் வங்கி அதிகாரி பேசுவதாகவும், உங்களது கிரெடிட் கார்டு புள்ளிகளை பணமாவோ அல்லது பரிசாகவோ மாற்ற வங்கிகணக்கு விவரங்கள், செல்போனுக்கு வரும் ரகசிய குறியீடு எண்ணை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார்.

இதை உண்மையென நம்பிய டாக்டரும், வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் செல்போனுக்கு வந்த ரகசிய குறியீடு எண்ணை தெரிவித்தார். இதையடுத்து சிறிதுநேரத்தில் டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்தது. இதுதொடர்பாக கேட்க டாக்டர், தன்னிடம் பேசிய நபரை செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் அவருக்கு, மர்மநபர் வங்கி அதிகாரி போல் பேசி பணத்தை அபேஸ் செய்ததை உணர்ந்தார். இதுகுறித்து அவர், மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்