பெங்களூருவில் துணிக்கடைகளில் சேலைகள் திருடிய பெண்கள் உள்பட 6 பேர் கைது

பெங்களூருவில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து துணிக்கடைகளில் சேலைகள் திருடிய பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-08-24 00:15 IST

பெங்களூரு:

பெங்களூரு ஐகிரவுண்டு மற்றும் அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள துணிக்கடைகளுக்கு சென்று ஒரு கும்பல் சேலைகளை திருடுவதை தொழிலாக வைத்திருந்தார்கள். அந்த கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், ஐகிரவுண்டு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் வெங்கடேஷ்வர ராவ், சிவக்குமார், சிவபிரசாத், பரத் ராணி, சுனிதா என்று தெரிந்தது.

இவர்கள் 6 பேரும் ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு வருவார்கள். பெங்களூருவில் உள்ள பெரிய துணிக்கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் சென்று திருமணத்திற்கு சேலைகள் வேண்டும் என்று கூறுவார்கள். அப்போது விலைஉயர்ந்த சேலைகளை திருடிவிட்டு, எந்த ஒரு சேலையையும் வாங்காமல் 6 பேரும் சென்று விடுவார்கள்.

கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தற்போது 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 6 பேரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 22 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் 6 பேர் மீதும் ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்