கங்கை நதியில் 56 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன மத்திய அரசு தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் கங்கை நதி தூய்மை திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய ஜல்சக்தி இணை மந்திரி பிஸ்வேஸ்வர் துடு எழுத்து மூலம் பதிலளித்தார்.

Update: 2022-07-29 21:39 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவையில் கங்கை நதி தூய்மை திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய ஜல்சக்தி இணை மந்திரி பிஸ்வேஸ்வர் துடு எழுத்து மூலம் பதிலளித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் கங்கை நதி தூய்மை திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய ஜல்சக்தி இணை மந்திரி பிஸ்வேஸ்வர் துடு எழுத்து மூலம் பதிலளித்தார்.

அப்போது அவர், 'கங்கை நதிப்படுகையில் நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளைப் பராமரிப்பதற்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் 56 லட்சத்துக்கு அதிகமான மீன் குஞ்சுகள் நதியில் விடப்பட்டு உள்ளன' என்று கூறினார்.

இதைப்போல 930 ஆமை குஞ்சுகளும் விடப்பட்டு இருப்பதாக கூறிய அவர், நன்னீர் ஆமைகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கு ஆதரவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீர்வாழ் உயிரினங்களுக்கான 4 மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்