'50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி அரசியலமைப்பை அழிக்க திட்டமிட்டார்' - யோகி ஆதித்யநாத்

50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழிக்க திட்டமிட்டார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-25 16:39 GMT

லக்னோ,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்து, அரசியலமைப்பை அழிப்பதற்கு திட்டம் தீட்டினார் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோராக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தி இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் அழிப்பதற்கு திட்டம் தீட்டினார். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சியைப் போன்ற சூழல் நாட்டில் உருவாக்கப்பட்டது.

காங்கிரஸ் அரசு நெறிமுறைகளை மீறி சுமார் 90 முறைக்கும் அதிகமாக மாநில அரசுகளை கலைத்தது. இன்று அவர்களுடைய நிலை மாறியிருந்தாலும், அவர்களின் அடிப்படை குணம் மாறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அடிபணிவதற்கு பதிலாக ஜனநாயக போராளிகள் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும், இந்தியாவையும் காப்பாற்றுவதற்காக போராடினர்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்