'ஹனிடிராப்' முறையில் பா.ஜனதா பிரமுகரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு; காங்கிரஸ் பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது
‘ஹனிடிராப்’ முறையில் பா.ஜனதா பிரமுகரை கடத்தி சென்று மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த காங்கிரஸ் பெண் பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மண்டியா:
'ஹனிடிராப்'
தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெட்டி. சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் பாஜனதா மாவட்ட தலைவர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ல் உறுப்பினராக உள்ளார். கடந்த பிப்ரவதி மாதம் 26-ந் தேதி இவர் தொழில் விஷயமாக மண்டியாவிற்கு வந்திருந்தார். வேலையை முடித்துவிட்டு மைசூரு செல்வதற்காக மண்டியா பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது காரில் பெண் உள்பட 4 பேர் வந்தனர். ஜெகாந்தை அழைத்த அவர்கள், தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர் நாங்களும் மைசூருவிற்கு தான் செல்கிறோம் என்று கூறி ஜெகநாத்தை அழைத்தனர். இதை ஏற்ற ஜெகநாத் காரில் ஏறினார். மைசூருவிற்கு சென்றதும் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர் ஒருவர் தங்கியிருப்பதாகவும், அவரிடம் தங்க கட்டிகள் கொடுத்துவிட்டு வருவதாகவும் காரில் இருந்த பெண் கூறினார். அப்போது ஜெகநாத் என்னை இறக்கிவிட்டு விடுங்கள் நான் மங்களூரு செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த பெண் விடவில்லை. ஓட்டலுக்கு சென்று அவரை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்று வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்.
பெண்ணுடன் நெருக்கம்
பின்னர் அங்கிருந்த ஓட்டல் அறைக்குள் சென்றதும், அந்த பெண் உள்பட 4 பேரும் ஜெகநாத்தை தனியாக விட்டு சென்றனர். இதனால் அவர் பதற்றம் அடைந்தார்.
அப்போது திடீரென்று பெண் ஒருவர் வந்து, ஜெகநாத்துடனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை பெண் உள்பட 4 பேரும் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அறைக்கு ெசன்ற கும்பல் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ உள்ளது.
நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் விட்டுவிடுவோம் இல்லையேல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று கூறி மிரட்டினர். அதற்கு ஜெகநாத் மறுப்பு தெரிவித்தார். இதில் கோபமடைந்த கும்பல் அவரை தாக்கினர். பயந்துபோன அவர் பணம் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கும்பல் ரூ.4 கோடி கேட்டு மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, ரூ.25 லட்சம் மட்டுமே உள்ளது என்றார். அதை வாங்கிய கும்பல் பின்னர் அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
பணம் பறிப்பு
இதையடுத்து மறுநாளும் அந்த கும்பல் ஜெகநாத்தை மிரட்டி ரூ.25 லட்சம் வாங்கினர். அதை ஜெகநாத் கொடுத்தார். ஆனால் கும்பல் விடவில்லை. தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் அதிருப்தியடைந்த ஜெகநாத் மண்டியா போலீசில் இது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது அதில் காங்கிரஸ் பெண் பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து நேற்று அந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மண்டியா டவுன் சுபாஷ்நகர் 8-வது கிராசை சேர்ந்த சல்மாபானு, ஜெயந்த் என்று தெரியவந்தது. சல்பாமானு காங்கிரஸ் பிரமுகர் மட்டுமின்றி சமூக ஆர்வலர், மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவ்வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக இள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.