வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை - எச்சரிக்கும் ரெயில்வே...!

வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என ரெயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Update: 2023-03-29 12:11 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் அதிவேக ரெயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு எளிதாக்குகிறது. மத்திய அரசு பல இடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக, பாரத் ரெயில் மீது கல் வீச்சு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், வந்தே பாரத் ரெயில்கள் மீது கல்லெறிந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தெலுங்கானாவில் பல்வேறு இடங்களில் இருந்து வந்தே பாரத் ரெயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரெயில்கள் மீது கல் வீசினால், இந்திய ரெயில்வே சட்டம் 153 பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அந்த வகையில், வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியதாக, ரெயில்வே பாதுகாப்பு படையினரால் இதுவரை 39 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்