இந்திய அணைகளில் நீர் சேமிப்பு 5% சரிவு - மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட தகவல்

இந்திய அணைகளில் கடந்த ஆண்டை விட நீர் சேமிப்பு 5% குறைந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Update: 2023-04-21 17:07 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள 146 அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் மொத்த அளவு ஏப்ரல் 13 நிலவரப்படி 7,019 கோடி கன அடியாக உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி இருந்த அளவை விட(7,406 கோடி கனஅடி) இது 5% குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 146 அணைகளில் 88 அணைகளில் உள்ள நீரின் அளவு கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது. 55 அணைகளில் கடந்த 10 ஆண்டு சராசரியை விட தற்போது நீரின் அளவு குறைந்துள்ளது.

கிழக்கு பகுதி மாநிலங்களான பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அணைகளில் சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 774 கோடி கன அடியாக உள்ளது. அந்த அணைகளின் மொத்த கொள்ளவில் இது 39% ஆகும். இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 42% ஆக இருந்தது.

அதே போல் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய வடக்கு பகுதி மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் சேமிப்பு, மொத்த கொள்ளளவில் 38% ஆக உள்ளது. தமிழகத்தில் உள்ள 7 அணைகளில் நீர் சேமிப்பு, மொத்த கொள்ளளவில் 62% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு 68% ஆக இருந்தது.

மொத்தமாக இந்திய அணைகளில் நீர் சேமிப்பு 5% குறைந்துள்ளது , காரீ பருவ பயிர்களின் விளைச்சலை பாதிக்கும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்