பா.ஜனதாவின் 40 சதவீத கமிஷன் ஆட்சியால் விதானசவுதா, வியாபார சவுதாவாக மாறி விட்டது-முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் 40 சதவீத கமிஷன் ஆட்சியால் விதானசவுதா, வியாபார சவுதாவாக மாறிவிட்டது என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2022-09-26 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷனுக்கு எதிராக பே-சி.எம். போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. பே-சி.எம். போஸ்டரில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு கமிஷன் பா.ஜனதா ஆட்சியில் பெறப்படுகிறது என்பது தெரியவரும். பே-சி.எம். விவகாரத்தின் மூலமாக காங்கிரஸ் கீழ்மட்ட அரசியல் செய்வதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். 40 சதவீத கமிஷன் பெறுவது பற்றி தெலுங்கானா மாநிலத்திலேயே போஸ்டர் வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பா.ஜனதாவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்.

நாங்கள் கீழ்மட்ட அரசியல் செய்வதாக கூறும் முதல்-மந்திரிக்கு, 40 சதவீத கமிஷன் பெறுவது கீழ்மட்டமான அரசியலாக தெரியவில்லை. 40 சதவீத கமிஷன் ஆட்சியால், விதானசவுதாவை, வியாபார சவுதாவாக மாற்றி வைத்திருக்கும் பா.ஜனதா ஆட்சியால், கர்நாடகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படவில்லையா?. இதற்கெல்லாம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்