மேற்கு வங்கத்தில் குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 தங்க பிஸ்கட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-03-07 11:24 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ எடை கொண்ட 40 தங்க பிஸ்கட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.57 கோடி என்று கூறப்படுகிறது. தங்க பிஸ்கட்டுகளை குளத்தில் பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்