விவசாயிக்கு 4 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லையில் விவசாயிகளுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பளித்தார்.

Update: 2022-11-27 21:23 GMT

கோலார் தங்கவயல்:-

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா தியாபசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 39). இவரது மகன் சதீஸ், விவசாயி. இவரது வீட்டின் அருகே சிறுமி ஒருவள் வசித்து வருகிறாள். இந்த சிறுமிக்கு சதீஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மாலூர் புறநகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் சதீசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோலார் மாவட்ட முதன்மை செஷன் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடத்து. அப்போது இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி பி.பி.தேவமானே குற்றம் சாட்டப்பட்ட சதீசிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சதீசை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்