பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணம் ; கணவர்களை விட்டுவிட்டு காதலர்களுடன் சென்ற மனைவிகள் - திடுக்கிடும் சம்பவம்...!
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் தவணையாக 50 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.
லக்னோ,
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொண்டுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின்படி வீடு கட்ட 2 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும். கட்டப்படும் வீட்டின் ஒவ்வொரு நிலையிலும் 2 லட்ச ரூபாய் மொத்தம் 4 தவணையாக தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி, மானியமாக குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் வீடு கட்ட 2 லட்ச ரூபாய் தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 4 தவணையாக மத்திய அரசு செலுத்தும்.
இந்நிலையில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கணவர்களை விட்டு விட்டு மனைவிகள் தங்கள் காதலர்களுடன் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரப்பன்ஹி மாவட்டத்தில் பல்ஹரா, பன்ஹி, சைதம்பூர், சிதாஹூர் ஆகிய 4 கிராமங்களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, அந்த கிராமங்களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு முதற்கட்ட தவணை தொகையான 50 ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.
அந்த பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, பரப்பன்ஹி மாவட்டத்தில் பல்ஹரா, பன்ஹி, சைதம்பூர், சிதாஹூர் ஆகிய 4 கிராமங்களில் 4 வீடுகள் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட குடும்ப தலைவிகளான 4 பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட தவணை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டபோதும் வீடு கட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீசை பெற்ற குடும்ப தலைவிகளின் கணவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் மனைவிகளை காணவில்லை என்றும் 2-வது தவணை தொகையை அனுப்ப வேண்டாம் என்றும் கூறி அதிர்ச்சியளித்தனர்.
4 கணவர்கள் தங்கள் மனைவிகள் 4 பேரும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவர்களில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்களின் காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறினர். மேலும், அடுத்தக்கட்ட தவணை தொகையான 50 ஆயிரம் ரூபாயை மனைவிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம் என்றும் 4 கணவர்களும் கூறியுள்ளனர்.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் வந்த உடன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு 4 மனைவிகள் தங்கள் கணவர்களை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலர்களுடன் ஓடிவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்கள் 4 பேரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தலா 50 ஆயிரம் ரூபாயை எவ்வாறு மீட்பது என்பது குறித்து அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.