கேரளா கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நெரிசல்: மாணவர்கள் 4 பேர் பலி

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள CUSAT பல்கலைக்கழகத்தில் நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-11-25 15:44 GMT

திருவனந்தபுரம்,

 கேரளா மாநிலம் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (குசாட்) ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் ஆண்டு டெக் ஃபெஸ்ட் தொடர்பாக இசைநிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கத்தில் நிகிதா காந்தியின் இசைநிகழ்ச்சி இன்று மாலை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் மாணவர்கள் சிக்கினர்.

இதில் 4 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். காயமடைந்தவர்களுக்கு களமசேரி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் நலன் இயக்குநர் பி.கே.பேசி கூறுகையில், முதற்கட்ட அறிக்கையின்படி, நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆடிட்டோரியத்தின் பின்புறத்தில் இருந்து பார்வையாளர்கள் முன்னோக்கி வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த இடத்தில் இருந்ததால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இந்த சம்பவம் கொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்