ஜீப்-லாரி மோதிய விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் பலி
மத்தியபிரதேசத்தில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஜீப் லாரி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தின் நகாடாவில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு பயிலும் சில மாணவர்கள் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு ஒரு ஜீப்பில் சென்றனர். உன்ஹேல் நகரில் அந்த ஜீப் செல்லும்போது, எதிரே வந்த ஒரு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
அந்த பயங்கர விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள், உருக்குலைந்த ஜீப்புக்குள் மாட்டிக்கொண்டனர். அவர்களை போலீசாரும், உள்ளூர்காரர்களும் கஷ்டப்பட்டு மீட்டனர்.