பேக்கரியை சூறையாடிய ஓட்டல் மேலாளர் உள்பட 4 பேர் கைது

பேக்கரியை சூறையாடிய ஓட்டல் மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2022-12-11 00:15 IST

பெங்களூரு:

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குந்தலஹள்ளி கேட் பகுதியில் நவீன்குமார் ஷெட்டி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேக்கரிக்கு சென்ற 4 வாலிபர்கள் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பேக்கரியை சூறையாடியதுடன், நவீன்குமார் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

சம்பவம் குறித்து நவீன்குமார் அளித்த புகாரின்பேரில் எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் பேக்கரியை சூறையாடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் பெயர்கள் கார்த்திக் (வயது 20), இன்னொரு கார்த்திக் (23), சல்மான் (20), மஞ்சுநாத் (23) என்பது தெரியவந்து உள்ளது. இதில் 20 வயது கார்த்திக் உணவு விற்பனை பிரதிநிதி ஆவார். இன்னொரு கார்த்திக் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்