தென்மும்பையில் ரூ.10 கோடி போதைப்பொருளுடன் 4 பேர் கைது

தென்மும்பையில் ரூ.10 கோடி போதை பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-16 21:29 GMT

மும்பை,

டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினர் சமீபத்தில் டெல்லி, திலக்நகர் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பிலான 5 கிலோ கொகைன் போதைப்பொருளுடன் தீபாலி ஒடிவனோர் என்ற பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அவர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சிலரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பெண்ணுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் தென்மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மும்பை வந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி தாவித் பெர்கே, தெசலங் அபிபி, ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த யாசக், பெலே ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான 2 கிலோ கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், இவர்கள் 2 பேரும் எத்தியோப்பியாவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து தீபாலி ஒடிவனோரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்