அரபிக்கடலில் ரோந்து பணியில் 4 கடற்படை கப்பல்கள் - இந்திய கடற்படை தளபதி

ஹவுதி படைகள் மீது சமீப காலங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.;

Update:2024-01-05 22:54 IST

புதுடெல்லி,

செங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் வணிக கப்பல்கள் மீது சமீப காலங்களாக நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஹவுதி படைகள் மீது சமீப காலங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே இப்போது அரபிக் கடலில் பகுதியில் மற்றொரு பகீர் சம்பவம் அரங்கேறியது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து இந்திய கடற்படையினர் அதிரடியாக களத்தில் இறங்கி கப்பலில் சிக்கியுள்ளவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். இந்தநிலையில், அரபிக்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இந்திய கடற்படை கப்பல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வணிகக்கப்பல்கள் மீதான தாக்குதல்களைத்தடுக்க அரபிக்கடல் 4 கடற்படை கப்பல்கள் பணியில் உள்ளன என்று இந்தய கடற்படை தளபதி ஹரிகுமார் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்