மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது

மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற நைஜீரியாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-08 18:45 GMT

சிட்டி மார்க்கெட்:-

பெங்களூரு மாரத்தஹள்ளி, எச்.எஸ்.ஆர். லே-அவுட், கோரமங்களா, இந்திராநகர் உள்ளிட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடப்பதாகவும், கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு இந்த போதைப்பொருள் விற்கப்படுவது பற்றியும் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போதைப்பொருட்கள் விற்ற 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் ஆதீஸ், வாசிம், சையத் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த வாலிபர் என்று தெரிந்தது.

இவர்கள் 4 பேரும், மாரத்தஹள்ளி, இந்திராநகர், கோரமங்களா பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதைப்பொருட்களை விற்று வந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் இருந்து கஞ்சாவையும், நைஜீரியாவை சேர்ந்த வாலிபரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ, கொகைன் போதைப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்று வந்துள்ளனர். கைதான 4 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 160 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பவுடர், 25 கிராம் கொகைன், ஒரு செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். அவர்கள் 4 பேரிடமும்

குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்