பெங்களூருவில் 397 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் மாநகராட்சி தகவல்

கன மழையால் பெங்களூருவில் 397 கி.மீ சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-26 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை கடந்த ஆகஸ்டு மாதம் தீவிரமடைந்தது. அப்போது பெய்த கனமழையால், பெங்களூரு மகாதேவபுரா, சர்ஜாப்புரா, வெளிவட்ட சாலை, பெல்லந்தூர் உள்பட பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில், இந்த பாதிப்பால் அரசுக்கு ரூ.340 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராடசி மதிப்பீடு செய்து இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூருவில் பெய்த கனமழையால் 7,700 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்டது. இதில் மகாதேவபுராவில் மட்டும் 3 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியது. 21 வீடுகள் பகுதியாக சேதமடைந்தது. தாசரஹள்ளியல் 261 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.14 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. இதுபோக மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.4 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு 397 கிலோ மீட்டர் அளவிற்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. நடைபாதையை பொறுத்தவரை ரூ.4 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் ரூ.340 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்