விமானத்தில் கடத்திய ரூ.34 லட்சம் ஐபோன்கள் பறிமுதல்
விமானத்தில் கடத்திய ரூ.34 லட்சம் ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு: பாங்காங்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் மீது வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் 23 ஐபோன்கள் இருந்தது. இதுகுறித்து அந்த பயணியிடம் விசாரித்த போது அவர் பாங்காங்கில் இருந்து பெங்களூருவுக்கு 23 ஐபோன்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 23 ஐபோன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். அதன்மதிப்பு ரூ.34 லட்சம் ஆகும். பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆனால் அவரது பெயர், விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.