ஆளும் காங்கிரசில் இருந்து 30 எம்.எல்.ஏ.க்கள் விலகுவார்கள்-குமாரசாமி பரபரப்பு பேட்டி

ஆளும் காங்கிரசில் இருந்து 30 எம்.எல்.ஏ.க்கள் விலகுவார்கள் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-22 18:45 GMT

பெங்களூரு, ஆக.23-

ஆளும் காங்கிரசில் இருந்து 30 எம்.எல்.ஏ.க்கள் விலகுவார்கள் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

செல்ல மாட்டார்கள்

காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்கிறது. ஆனால் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் காங்கிரசுக்கு செல்ல மாட்டார்கள். காங்கிரசை சேர்ந்த சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகும் நிலையில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையை இரண்டே மாதத்தில் காங்கிரசார் உருவாக்கி கொண்டுள்ளனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விலகுவதை தடுக்கும் நோக்கத்தில் பிற கட்சியினர் தங்கள் கட்சிக்கு வருவதாக காங்கிரசார் சொல்கிறாா்கள்.

எஸ்.டி.சோமசேகர் 3 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருந்தார். மைசூரு பொறுப்பு மாவட்ட மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார். அவர் கேட்ட அனைத்தையும் பா.ஜனதா செய்து கொடுத்து. கூட்டணி ஆட்சியில் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி அவர் பா.ஜனதாவுக்கு சென்றார்.

வளர்ச்சி பணிகள்

ஆனால் 3 ஆண்டுகள் மந்திரியாக இருந்தும் யஷ்வந்தபுரத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை. இப்போது தொகுதி வளர்ச்சி சம்பந்தமாக முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்ததாக அவர் கூறுகிறார். முதல்-மந்திரியை சந்திக்க அவர் கூறும் காரணங்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்