ரெயில்களில் அடிபட்டு 30 ஆடுகள், 3 மாடுகள் செத்தன

சிவமொக்காவில் ரெயில்களில் அடிபட்டு 30 ஆடுகள், 3 மாடுகள் பரிதாபமாக செத்தன.

Update: 2022-07-05 15:34 GMT

சிவமொக்கா;

30 ஆடுகள் செத்தன

ஹாவேரி மாவட்டம் சவனூரை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி அருகே மந்தை அமைத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், தனது ஆடுகளை பத்ராவதியில் இருந்து சிவமொக்கா நோக்கி ஓட்டி சென்றார். அப்போது ஆடுகள், அந்தப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தன.

அந்த சமயத்தில் அந்த வழியாக மைசூரு-சிவமொக்கா பயணிகள் ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த ரெயில், தண்டவாளத்தில் நின்ற ஆடுகள் மீது மோதியது. இதில் ஆடுகள் தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன.

3 எருமை மாடுகள்

இதேபோல், கும்சி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 3 எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த தாளகொப்பா-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் எருமை மாடுகள் மீது மோதியது. இதில் 3 எருமை மாடுகளும் தூக்கி வீசப்பட்டு செத்தன.

இந்த விபத்துகள் குறித்து சிவமொக்கா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்