ஜார்க்கண்டில் 3 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்க்பம் மாவட்ட வனப்பகுதியில் 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
சாய்பசா,
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்க்பம் மாவட்ட வனப்பகுதிக்குள், பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக ஆயுதப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வாகனங்களை சோதனை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அருகில் உள்ள கம்லா மாவட்ட வனப்பகுதிக்குள் இருந்து சிங்க்பம் மாவட்டம் சரன்டா வனப்பகுதிக்குள் நுழைந்து 3 பேர் வாகனங்களில் சென்று கொண்டிருப்பதை கண்டனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டும் போஸ்டர்கள், துண்டு அறிக்கைகள் இருந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.