காரில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-05 15:06 GMT

மங்களூரு;

போலீசார் சோதனை

உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா அனமோடா போலீசாருக்கு கோவாவில் இருந்து காரில் மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் சந்தேகப்படும்படியாக கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை, போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில், மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர்.

63 லிட்டர் மதுபானம்

விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த சுதா நரேஷ் என்பதும், கோவாவில் இருந்து ஆந்திராவிற்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்வதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 63 லிட்டா் மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்