மே.வங்கம்: பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!

மேற்கு வங்கத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-08-25 02:32 GMT

ஹவுரா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நேற்று மாலை பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும்  20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பஞ்ச்லாவில் உள்ள துலோர்பாத் பகுதிக்கு அருகே ஏற்பட்ட இந்த விபத்தானது பேருந்தின் டயர் ஒன்று வெடித்ததில் ஏற்பட்டுள்ளது.

இதனால், பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த டிரக் மீது மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தால் 3 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரில்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்