ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்

ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-08-05 22:37 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளனது. நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இரவு 9.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் வடக்கு 36.38 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 70.77 டிகிரி தீர்க்கரேகையிலும் 181 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இந்து குஷ் பகுதியில் காலை 8.36 மற்றும் 10.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இரண்டு நிலநடுக்கங்களும் ரிக்டர் அளவுகோலில் 4.8 மற்றும் 5.2 ஆக பதிவானது. அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கங்களால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்