உ.பி: இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து... 3 பேர் பலி- 20 பேர் படுகாயம்

உத்தரபிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2022-12-18 09:25 IST

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்