மேற்கு வங்காளத்தில் பஸ் மீது எண்ணெய் லாரி மோதி பயங்கர விபத்து - 27 பேர் படுகாயம்

மேற்கு வங்காளத்தில் பஸ் மீது எண்ணெய் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 27 பயணிகள் காயமடைந்தனர்.

Update: 2023-03-26 11:16 GMT

புர்பா மெதினிபூர்,

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் பஸ் மீது எண்ணெய் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 27 பயணிகள் காயமடைந்தனர்.

இன்று பிற்பகலில் தெற்கு வங்காள மாநில போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று திகாவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஹல்தியா-மெச்செடா மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பஸ் மீது எண்ணெய் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் சாலை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

இதையடுத்து விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து காயமடைந்த பயணிகளை மீட்டனர். அவர்கள் அனைவரும் டோம்லுக் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 12 பயணிகள் சிகிச்சை பெற்று உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்