சோதனைக்காக சிபிஐ வந்த நேரம் சுவாரஸ்யமானது - ப.சிதம்பரம்

"சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் இதுவரை எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை" என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2022-05-17 07:18 GMT
சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில்  சி.பி.ஐ. அதிகாரிகள் 5 மணி நேரேத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் அவர் டுவிட்டர் பதிவில்,
 
டெல்லி, சென்னையில் எனது வீடுகளில் சிபிஐ நடத்தும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.ம்சிபிஐ காண்பித்த எப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை. சோதனை தருணம் சுவாரஸ்யமானது என்றார்.

மேலும் செய்திகள்