கார்த்தி சிதம்பரம் இடங்களில் சிபிஐ ரெய்டு ஏன்?

சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2022-05-17 05:21 GMT
புதுடெல்லி,

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தநிலையில்  சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சுமார் 250 விசாக்கள் வாங்கி தருவதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. 

2010 முதல்  2014 வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 250 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்